நடிகர் ஷாரூக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை! குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானுக்கு அண்மையில் வாடகை தாய் மூலம் குழந்தை பிற ந்தது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரித்த வாடகை தாய் குறிப்பிட்ட காலத்திற்கு 2 மாதத்துக்கு முன்பே குழந்தையை பெற்றார்.
குறைப் பிரசவம் என்பதால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இக்குழந்தையை ஷாருக்கான் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.
இதுதொடர்பாக தெரிவித்த ஷாரூக், எனக்கு புதிதாக பிறந்த குழந்தை பற்றி பல்வேறு விதமான பேச்சுகள் உலா வருகின்றன. பல மாதங்கள் குறை பிரசவத்தில் இருந்த குழந்தை தற்போது எங்களது வீட்டிற்கு வந்துள்ளான். நான், என் மனைவி கவுரி மற்றும் குடும்பத்தினர் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது பாலின சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இது உண்மை அல்ல. குழந்தை ஆணா? பெண்ணா? என்று சோதனை செய்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த பின்புதான் அது ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டோம். வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைக்கு 'அப்ராம்' என்று பெயர் சூட்டியுள்ளோம் என கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment