Wednesday, July 17, 2013

மாணவர்களுக்கு இலவச விட்டமின் வில்லைகள்

பாடசாலைச் சிறார்களின் அறிவு விருத்தி, ஞாபகச்சக்தி, பாடங்களில் கரிசனை மற்றும் சுறுசுறுப்பு என்பவற்றை அதிகரிக்க சத்துள்ள விட்டமின் வில்லைகளான இரும்புச்சத்துள்ள வில்லைகள், விட்டமின் சீ போன்ற வில்லைகளை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட வில்லைகளை மாணவர்கள் தொடர்ச்சியாக 6 மாத காலத்துக்கு பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினூடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com