Wednesday, July 3, 2013

எனது மகன் எதிர் கொண்டது சிறிய விடயமே-ஹெகலிய!!!

கிரிக்கெட் வீரரான எனது மகன் ரமித் ரம்புக்வெல, பிரித்தானிய விமான சேவைக்குரிய விமானத்தில் எதிர்கொண்டது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லதெரிவித்துள்ளார்.

இது ஒரு சிறிய விடயமாகுமென அந்த விமான சேவை நிறுவனமே கூறியிருப்பதாகவும். விமானத்தின் பின்னால் உள்ள கதவிற்கும் மலசல கூட கதவிற்கும் இடையில் இரண்டு மீற்றர் தூரம் கூட இல்லாத நிலையில் யாரும் இவ்வாறானதொரு குழப்பத்திற்கு உள்ளகலாம்.

இந்நிலையில் இலங்கை ஊடகங்கள், டெய்லி மெயிலில் வெளியான செய்திக்கு கடும் பாரத்தை கொடுத்துள்ளது, இதுதொடர்பில் எனது மகன் என்னிடம் ஏற்கனவே கூறியுள்ளார். விமானத்திலிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுக்கின்ற சகல விசாரணைகளுக்கும் நான் ஆதரவளிப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment