Monday, July 8, 2013

கிழக்கில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்.

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்கதும், கதிர்காம பாதயாத்திரை அடியார்களின் பிரதான தலமாக விளங்கி வரும் ஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவப் பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்து ள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளா கியதாகவும், அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது.

முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com