Thursday, July 11, 2013

அனைத்து தாதி பயிற்சி கல்லூரிகளும் எதிர்வரும் நவம்பரிற்கு முன்னர் புனரமைக்கப்படும் -மைத்திரிபால

நாட்டிலுள்ள அனைத்து தாதி பயிற்சி கல்லூரிகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் புனரமைக்கப் படவுள்ளன என, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆயிரத்து 25 பேரை ஒரே தடவையில் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்து வதற்காக நாட்டிலுள்ள அனைத்து தாதியர் பயிற்சி கல்லூரிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

தாதியர் பயிற்சி கல்லூரிகளை நிர்வகிப்பதற்காக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் இருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்கவிற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதேச பொறியியலாளர்கன் மூலம் மாதாந்தம் தாதி பயிற்சி கல்லூரிகளை கண்காணித்து அவற்றில் நிலவும் குறைபாடுகள் தொடர்பான அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு அமைச்சர் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இதே வேளை தாதிச்சேவையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயும் பேச்சுவார்த்தை ஒன்று அமைச்சருக்கும் அரச ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கும் இடையில் இடம்பெற்றது.

தாதியர் சேவையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment