Tuesday, July 9, 2013

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் முடிச்சுகளை கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளிறேவும்!

"புத்தகாயாவை பாதுகாக்க தெரியாத இந்தியா, இலங் கைக்கு பாதுகாப்பை கற்றுத்தர வேண்டியதில்லை!

தனது நாட்டை பாதுகாக்க தெரியாத இந்தியா இலங்கைக்கு பாதுகாப்பை கற்றுத் தர வேண்டிததில்லை எனவும், புத்தகாயாவை பாதுகாக்க முடியாத இந்தியாவின் பாது காப்பு ஆலோசகர் இலங்கையிலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொது பலசேனாவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் புத்தகாயா விகாரை மீதான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் முஜாஹிதீன் என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கமே உள்ளது எனவும், 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் முஜாஹிதீன் என்ற முஸ்லிம் பயங்கரவாத இயக்கம் இயங்குவதை இந்திய உளவுப் பிரிவினர் கண்டுபிடித்து 2010இல் அவ்வியக்கத்தை தடை செய்தனர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் 2012ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் டில்லியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது தங்களுக்கு புத்தகாயா விகாரை மீது தாக்குதல் நடத்த பணமும் வெடி பொருட்களும் கிடைத்தன என வாக்கு மூலம் வழங்கியிருந்தனர். இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் உளவுப் பிரிவினர் பீகார் மாநிலத்திற்கு அறிவித்தனர். ஆனால், பீகார் மாநில ஆட்சியாளர்களோ, இந்திய மத்திய அரசாங்கமோ புத்தகாயா விகாரைக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. இதன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

புத்தகாயாவுக்கு பாதுகாப்பை வழங்க முடியாத இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எமக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்க இங்கு வந்திருப்பது வேடிக்கையாகும். எனவே, அவர் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு உடனடியாக இந்தியாவுக்கு போக வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கத்திற்கு எமது பாதுகாப்பை பலப்படுத்தும் அனுபவம் இருக்கின்றது எனவும், இந்தியாவின் ஆலோசனைகள் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையை எங்கள் மீது திணிக்கும் இந்தியா இன்று பீகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் பாடம் கற்க வேண்டும். அதாவது இந்திய மத்திய அரசின் உளவுப் பிரிவினர் புத்தகாயாவின் ஆபத்து தொடர்பில் அறிவுறுத்தியும் பீகார் மாநில ஆட்சியாளர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

எனவே எம்மீது மாகாண சபை முறைமையை திணிப்பதை இந்தியா கைவிட வேண்டும் எனவும் இதனை இலங்கையின் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், அதற்கமைய தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் முஜாஹிதீன், வஹாபிசம், தஜ்வீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்காக உலகிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் ஓரணியில் திரளும் காலம் வந்துவிட்டது என்றார்.

1 comments :

Anonymous ,  July 9, 2013 at 4:37 PM  

It is the true voice of a real Buddhist.They love Buddha,they love His preachnigs.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com