Saturday, July 27, 2013

வட்டிக்காரனின் மகனுக்குத்தான் பணம் பெரிது... எனக்கல்ல! - தயாசிரி

ரூபா 25 கோடி பணத்திற்கு அடிமையாகியே அரசாங்கத்துடன் தயாசிரி இணைந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில், தயாசிரி ஜயசேக்கர, 'வட்டிக்காரனின் மகனொருவனுக்கு பணம் பெரிதானதற்கு எனக்குப் பணம் பெரிதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹெட்டிபொல நகரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

'தயாசிரி 25 கோடி ரூபாவுக்காகவே ஆளுங் கட்சியினருடன் இணைந்துகொண்டார் என்று இப்பொழுது கதைக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து யாரேனும் ஒருவர் விலகிவிட்டால் பொதுவாக வரும் குற்றச்சாட்டு அது. பணத்திற்காக அடிமைப்படுபவனல்லன் தயாசிரி ஜயசேக்கர. அதனால் அந்த உடைந்த கதையைச் சொன்ன பா.உ. ஹரீத் பிரனாந்துவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறு மூன்றாம் வகுப்பு அரசியலில் விழுந்தமையை இட்டு நான் வெட்கப்படுகிறேன். வட்டிக்காரனொருவனின் மகனுக்கு பணம் பெரிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணம் பெரிதாகத் தெரிவதில்லை.

இன்னும் கதைக்க வந்தால் அந்த வரலாற்றை என்னிடம் சரியாகவே கேட்டுக்கொள்வார். இந்த தலைவரின் நாறக்கூடிய ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சென்றதன் வெளிப்பாடு அது. அதனைத் தெரிந்துகொள்ளவியலாமல் அந்தத் தலைவரின் நாறும் ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதாயின் அவர்களும் அந்த குப்பையிலேயே விழுந்துவிடுவார்கள்'

என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment