கிராம உத்தியோகத்தர்கள் பிறரின் கையை எதிர்பார்த்தால், அரசாங்கத்தின் கை கிராம உத்தியோகத்தர்கள் மீது ஓங்கும்...!
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் அன்றி அதற்கு அப்பால் கிராம உத்தியோகத்தர்கள் எந்தவொரு நிறுவனத்தினாலும் தனிநபரினாலும் அமைப்பினாலும் பரிசில்களோ கையூட்டுக்களோ பெற்றுக் கொள்ளக்கூடாது என அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கேற்ற சுற்றுநிரூபம் அனைத்து கிராமசேவகர் களுக்கும் காலக் கிரமத்தில் அனுப்பிவைக்கப் படவுள்ளதாகவும், அவ்வாறு ஏதேனும் பொருள்களை பொதுமக்களிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
பதவியின் கௌரவத்தைக் காத்து, அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு, அரசியலில் பக்க சார்பின்றி, இன மத வேறுபாடு காட்டாமல் ஒருதலைப் பட்சமின்றி தனது கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றுவதற்காக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து கிராம சேவகர்களிடமும் கேட்டுள்ளது.
(கேஎப்)
2 comments :
It is a an excellent circular of ministry of internal affairs,but it is unfair to stretch your finger on Grama Sevakas only,the entire public service must come under this pressure,because corruption plays a dominant role.In a democratic country the Law cannot be only for the poor.
first clear gramasevakas
Post a Comment