கல்முனை லயன்ஸ் கழகத்தின் புதிய நிருவாகிகள்
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306சீ2 மாவட்டத்திலுள்ள கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 2013/2014 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வு 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியிலுள்ள கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
லயன் எஸ்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுநர் சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி செயலாளர் ஏந்திரி லயன் என்.பி.ரஞ்சன் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுணர் சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொருளாளர் லயன் ஜீ.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஏனைய அதிதிகளாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுநர் சபையின் பிராந்திய தலைவர் லயன் எஸ்.தைரியராஜா, வலய தலைவர் லயன் கே.பொன்னம்பலம், ஆளுநர் சபை இணைப்பாளர்களான லயன் எம்.வை.ஏ.சக்கூர், லயன் எஸ்.சன்முகநாதன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது 2013ஃ2014ம் வருடத்தக்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன், செயலாளர் லயன் ஏ.ஜே.எம்.ஹனீபா, பொருளாளராக லயன் பி.ஜே.பத்திரன, அங்கத்துவ பணிப்பாளர் லயன் எஸ்.தைரியராஜா, 1வது உப தலைவராக லயன் .எஸ்.நந்தகுமார், 2வது உப தலைவர் லயன் ஜே.பி.பத்துலோமியஸ், 3வது உப தலைவராக லயன்.எம்.கோபாலரத்தினம், கணக்காய்வாளர் லயன் எம்.வை.ஏ.சக்கூர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களான லயன் ஏந்திரி யூ.எல்.ஏ.அஸீஸ், லயன் ஈ.நித்தியானந்தம், எஸ்.சன்முகநாதன், லயன்.கே.பொன்னம்பலம், லயன் எஸ்.சசேந்திரன், லயன் ஏந்திரி பி.ராசமோகன், லயன் கே.எஸ்.ஐ.ராமகிறிஷனன், லயன் டேமர் கே.யோகராஜா ஆகியோர் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பதவிப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
(பீ.எம்.எம்.ஏ. காதர்)
0 comments :
Post a Comment