Tuesday, July 9, 2013

பயங்கரவாதிகளை அரவணைத்த இந்தியாவை பயங்கரவாதிகளே பயமுறுத்துகிறார்கள்....!

தெற்காசியப் பிராந்தியத்தினுள் பயங்கரவாதிகளை உசுப் பேற்றிய இந்தியா இன்று இனவாத, மதவாத, வர்க்கவாத பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாக மாறி, பயங்கர வாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்ற நிலைமை யிலுள்ளது, என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பிரிவின் செயலாளரும் முன்னாள் கலாச்சார அமைச்ச ருமான பியஸிரி விஜேநாயக்க தெளிவுறுத்துகிறார்.

நேற்று (08) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்தகயா பயங்கரவாதத் தாக்குதல்’ எதிர்ப்புத் தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பியஸிரி விஜேநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துரைத்த விஜேநாயக்க,

‘இந்தியாவுத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால்நேற்று (07) அதிகாலை சித்தார்த்தர் புத்தபிக்குவாக மாறிய இடம் பயங்கவரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்காளியுள்ளது. இந்த்த் தாக்குதலை சிறிதாக எண்ண முடியாது. இத்தாக்குதலானது பெளத்தர்களின் தலையாய இடத்திற்கே நிகழ்ந்துள்ளது. இங்கு புத்தகயாவைச் சுற்றி 09 இற்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்துள்ளன. இதனால் இரு பௌத்த இளம் பிக்குகள் கடும் காயம் அடைந்துள்ளனர். பௌத்த மத வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்த பல பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த்த் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அன்று புலிப் பயங்கரவாதிகள் புனித தலதா மாளிகையைத் தாக்கியபோது ஜயஸ்ரீ மகா போதியை வழிபடச் சென்றிருந்தோர் துப்பாக்கி ரவைகளுக்கு இரையானபோது இந்நாட்டு பௌத்தர்களினதும் சர்வதேச பௌத்தர்களினதும் உள்ளங்கள் குமுறின.

அதேபோன்று இன்று புத்தகயா தாக்குதலுக்குள்ளாகியிருப்பதும் சர்வதேச பௌத்த சமூகத்தைப் பெருங் கவலைக்குள்ளாக்கியிருக்கின்றது. இலங்கையினுள்ளும் இவ்வாறான படு பயங்கரமான பயங்கரவாதிகள் 30 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்தனர். என்றாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு தாய் மக்களாகநின்று அந்த பயங்கரவாத இயக்கத்தை 2009 இல் படுதோல்வியடையச் செய்தோம்.

ஆயினும் அதற்காக எமது பிராந்தியத்தில் பெரும் பலம் வாய்ந்த நாடாக இருக்கின்ற இந்தியா அதற்கு எவ்வித உதவியும் எங்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் புலிகளுக்கு ஆதரவாக நின்று அவர்களை உசுப்பேற்றியது மட்டுமே நடந்தது. ஐக்கிய அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்தேய ஏகாதிபத்தியம் இலங்கையிலுள்ள தமது கூலிப் படையாகிய புலிப்படையை தோல்வியடையச் செய்ததனால், பழி வாங்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றவியலைக் கொணர்ந்தது. அவ்வேளையிலும் இந்தியா மேற்கத்தேயத்திற்கு ஆதரவாக நின்று, புலிகளுக்காகவே கண்ணீர் வடித்தது.

மேற்கத்தேய ஏகாதிபத்தியம், புலிகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர் தமிழ் தனவந்தர்கள் மற்றும் தமிழ்நாட்டு இனவாத பிரிவினைவாத அரசியலாளர்களின் புண்ணியத்தில் இருக்கின்ற மன்மோகன்சிங் அரசு, இன்று பயங்கரவாதிகளின் கைப்பொம்மைகளாக உள்ளன. இந்தியாவின் இந்தச் செயற்பாடானது தெற்காசியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாகவுள்ளது. இன்று இந்தியாவின் இந்திய மேற்கத்தேய அரவணைப்பு, பயங்கரவாதிகளை உசுப்பேற்றிவிடுகின்ற பிழையான அரசியல் நகர்வு போன்றவற்றால் இன்று அந்நாட்டினுள்ளேயே இனவாத, மதவாத, வர்க்கவாத பிளவுகள் ஏற்படுவதை நிறுத்தவியலாமல் இருக்கின்றது.

இங்கு இந்தப் பயங்கரவாத்த்துடன் தொடர்புற்ற இன்னொரு விடயத்தை உங்கள் முன்வைப்பதற்கு விரும்புகின்றேன். புத்தகயா மகாபோதி அமைந்திருப்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில். இந்த உலக மரபுரிமையின் பாதுகாப்பு பீகார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உலக மரபுரிமையைப் பாதுகாப்பது பிராந்தியப் பொலிஸ்... ? இந்திய மத்திய அரசுக்கு அதில் தலையிட முடியாது. ஏறக்குறைய 06 மாதங்களுக்கு முன்னர் புத்தகயா தாக்குதலுக்குள்ளாகவுள்ளதாக மத்திய அரசின் புலனாய்வுத்துறை எதிர்வுகூறியிருந்தது. ஆயினும் பீகார் பொலிஸார் இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்தியா அதிக பலம் பொருந்திய நாடு. ஆயினும் இந்த பிராந்திய ஆட்சிமுறையினால் இந்தியா தனக்குரிய பொலிஸ் அதிகாரத்தைச் சரியாக செயற்படுத்த முடியாதுள்ளது என்பது எங்களுக்கு நன்கு தெளிவாகின்றது. இன்று எங்கள் நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரத்தையும் பரவலாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த வண்ணமுள்ளன. பொலிஸ், காணி அதிகாரங்களை வட மாகாண சபைக்கு வழங்குமாறு எங்களுக்கு இந்தியா கட்டளையிடுகிறது. என்றாலும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்... பொலிஸ் அதிகாரத்தை பிராந்திய, மாகாணங்களுக்கு வழங்கும்போது என்ன நடக்கிறது....? நாங்களும் இந்தியாவைப் போல் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கினால் உலக மரபுரிமையாகிய புத்தகயாவிற்கு நிகழ்ந்தவை வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

மேற்கத்தேயத்தின் விருப்பிற்கு ஏற்ப, புலம் பெயர் தமிழ் தனவந்தர்களின் விருப்பிற்கு, தமிழ்நாட்டு பிரிவினைவாத, இனவாத அரசியலாளர்களின் விருப்பிற்கு இந்தியாவை பயங்கரவாத்த்தின் கைப்பொம்மையாக மாற்றியுள்ள தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் இப்போதாவது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயற்கரியன செய்ய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது? எவ்வாறு வெற்றி கொள்வது? போன்ற பாடங்களை அயல்நாடான நமது இலங்கையிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள முடியும். அவ்வாறேனும் கற்று, தெற்காசியப் பிராந்தியம் முகம் கொடுக்க வேண்டிய அச்சுறுத்தல்களை அழித்தொழிப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும்’

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்துறைச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com