Wednesday, July 17, 2013

யுத்த வீரர்களுக்கு ஜனாதிபதி “விக்ரம சம்மான” பதக்கம் அணிவித்து கௌரவிப்பு! (படங்கள் இணைப்பு)

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தமது உயிரைப் பணயம் வைத்து முன்னேறிச் சென்று, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் முயற்சியில் வெற்றி கொண்டு, சிறந்த சேவையாற்றிய யுத்த வீரர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் “விக்ரம சம்மான”பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) அலரி மாளிகையில் இடம் பெற்றது.

முப்படைகளையும் சேர்ந்த 19,158 படைவீர்ர்கள் பதக்கங்கங்ளைப பெறத்தகுதி பெற்றிருந்தனர். அவர்களுள் தரைப்படையைச் சேர்ந்த 147 வீரர்களுக்கும், கடற்படையைச் சேர்ந்த 43 வீரர்களுக்கும், விமானப்படையைச் சேர்ந்த 26 வீரர்களுக்குமாக 216 வீரர்களுக்கு ஜனாதிபதியவர்களால் வைபவரீதியாக பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

ஜனாதிபதியவர்கள் முதலில் படைகளின் தளபதிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். இப்பதக்கங்களுள் 156 விக்ரம விபூசன விருதும், 2232 ரன விக்ரம பதக்க விருதும், 16,770 ரனசூர பதக்க விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின்போது பிரதமர் டீ.எம் ஜயரத்ன, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், முப்டைத்தளபதிகள்,பொலிஸ் மா அதிபர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com