மாநிலம் வேண்டாமாம் ! மத்தியிலேயே இருக்கப்போகின்றாராம் டக்ளஸ்!
„மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சுலோகம். அக்கட்சியின் செயற்பாட்டுக்கும் சுலோகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத போதும், இச்சுலோகத்தை நாங்கள் குப்பபையில் போட்டுவிட்டோம் என ஈபிடிபி இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009 மே மாதம் பிரபாகரன் மண்டியிட்டு மண்டையில் கொத்து வாங்கிய காலகட்டங்களில், பாரிஸிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த டான் ரீவி யில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்சி ஒன்றில் தொலைபேசி ஊடாக பங்கெடுத்த ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண சபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவ்வாறு அறிவிக்கப்படும்போது மாநிலத்திற்கு சேவை செய்வதற்காக தான் மத்தியில் அமைச்சுப்பதவியை துறப்பேன் என்றும் கூறினார். அத்துடன் மக்கள் தன்னை முதலமைச்சர் ஆக்கினால் „ஓவர் த நைட் ஐ வில் சோல்வ் த ரமில்ஸ் பிறப்பிளம்' „ஒரு இரவில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன்' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் உரக்கவும் கூறினார்.
தற்போது மாகாண சபைத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் முட்டி மோதிக்கொள்கின்றது. ஆனால் நான் மாகாண சபை தேர்தல் வந்தால் அத்தேர்தலில் போட்டியிடப்போகின்றேன் என கதை விட்டுக்கொண்டிருந்த டக்கிளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறியக்கிடைக்கின்றது.
வட மாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது. இக்கட்சிக்கு சுமார் மூன்றில் இரண்டு பங்கு வேட்பாளர்களை கூட்டமைப்பு ஒதுக்கியுள்ளது. இந்த வேட்பாளர்கள் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற தவராசாவின் தலைமையிலேயே போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது. கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதியை சந்தித்த டக்ளஸ் இது விடயத்தில் தனது குள்ளநரிக்கொள்கையை தெளிவு படுத்தியதாகவும் அதற்கு சாதகமான சமிக்கை கிடைக்காத நிலையில் எதிர்வரும் 15ம் திகதி அடுத்த சந்திப்பு ஒன்று நிகழவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சக்கி மிக்க வேட்பாளர்கள் எனத் தாங்கள் கருதுகின்றவர்களை நிறுத்தி தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்றபோது , தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து நிற்கக்கூடிய சக்தியை கொண்டிருக்கின்ற (டக்களஸ் மக்கள் சேவையின் ஊடாக பெற்ற சக்தி என அர்த்தம் கொள்ளக்கூடாது , தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்ததால் கிடைத்த சக்தி) டக்ளஸ் அதிலிருந்து பின்வாங்க முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை தருகின்றது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியிலிருக்குமபோது அவர் வந்தால் நான் வழிவிட்டு சென்றுவிடுவேன் என சொல்லிக்கொண்டிருந்த டக்ளஸ் அவரில்லாத இடத்திற்கு அவரது அடிவருடிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழிவிடுவதற்காக இந்த முடிவை எடுக்கின்றாரா? அன்றில்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாது என்றும் , தோல்வியை தழுவினால் , பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணத்தை இழந்த கதையாக கபினட்டு மந்திரிப்பதவி போய்விடும் என்ற பயமா? அன்றில்
கபினட்டு மந்திரிப்பதவி போனால் தம்பியின் பெயரிலுள்ள பிசினசுகள் ஒன்றையும் முறையாக கொண்டு செல்ல முடியாது என்ற பயமா?
என்ற எம்மிடமுள்ள ஏகப்பட்ட கேள்விகளுக்கு டக்ளசிடம் நேரடியாக பதிலினை பெற்றுக்கொள்ள தொடர்பு கொண்டபோது, „ஆசுபத்திரிக்கு போய்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் செல்ல எடுங்கோ' என்றார். தேர்தல் என்று வந்துவிட்டால் அடிக்கடி ஆசுபத்திரிக்கு போகவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் சுகதேகிகளிடம் மக்கள் பணியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குவது சிறப்பு.
எது எவ்வாறாக இருந்தாலும் தற்போது, ஈபிடிபி யின் முக்கியஸ்தர் ஒருவர் யாழில் சட்ட விரோத , மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் டக்ளஸ் யாழ் தேர்தலில் மக்களை சந்திப்பதிலிருந்து தன்னை விடுவித்து அந்த இடத்திற்கு நியமிக்க திட்டமிட்டுள்ள நபரான தவராஜா கடந்த காலத்தில் எல்ரிரிஈ பயங்கவாதிகளுக்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் தேடப்பட்டபோது பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியவர். தேவை ஏற்பட்டால் ஏற்பட்டால் தவராஜாவை நான் தருவித்து தருவேன் என டக்ளஸ் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடியவரான ஒருவரை தேர்தலில் நிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமானதோர் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்க டக்ளஸ் முனைவதன் மர்மம் என்ன?
2 comments :
He like only Money and nothing else , sariyaana punaa mahan.
உண்மையில், டக்கிளஸ் தேவானந்தாவுக்கு ஒரு தனி மரியாதை யாழ்மாவட்டத்தில் இருந்தது. அது அவர்மீதான புலிகளின் அடாவடித்தன செயற்பாட்டினால் வந்த அனுதாபதில் உருவானது. ஆனால் அவரின் கட்சிக்கு என்றுமே மதிப்பு கிடையாது, ஏனனில் அவரின் கட்சி அங்கத்தவர்வர்களின் தீய செயற்பாடுகளும், தீய நடத்தைகளும், பாரிய குற்றங்களுமே முழுகாரணம். ஆனால் கட்சி தலைவர் டக்கிளஸ் தேவானந்தா இதுவரைக்கும் அதை கண்டுகொண்டதுமில்லை, கண்டித்ததுமில்லை, தண்டித்ததுமில்லை. அதுவே இன்று டக்கிளஸ் பாதாள குழியை நோக்கி செல்ல வழிவகுத்துள்ளது.
Post a Comment