Wednesday, July 24, 2013

பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு பான்ட் வாத்தியக் கருவிகள்.

திருக்கோவில் வலயத்துக்கு உட்பட்ட திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக நிலவிவந்த குறைபாடு ஒன்று நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் பான்ட்வாத்தியக் குழு ஒன்று இருந்தும் அவர்களுக்கு தேவையான பாத்தியக் கருவிகள் இருக்கவில்லை.

இக்கருவிகள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.புஸ்பகுமார் அவர்களால் இன்று ( 24.07.2013 ) பகல் 12.30 மணியளவில் வழங்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ரீ.தவராஜா அவர்கள் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினர் குறித்த கருவிகளை பெற்றுக்கொண்டதுடன் இந்நிகழ்வில் அதிதிகளாக அருட்.ஷம் ஜயதிலகரகஜா அவர்களும் கனடிய நாட்டவர்களான அருட்.ஜேண் கெலியறும் திருமதி.மேரி கெலியறும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com