Sunday, July 28, 2013

தயா மாஸ்டருக்கு எதிர்ப்பு வெடிக்கிறது யாழில்!

எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளராகவிருந்த வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டருக்கு வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு பெயர் முன்மொழியப்படவில்லை எனத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப வட மாகாண சபைக்காக போட்டியிடக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியலில் இவரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக செய்திகள் கூறுகின்றன.

தயா மாஸ்டர் தவிர, எம்.எம். சிராஸ் என்பவரின் பெயர் முன்மொழிவு கிடைக்கப்பெறாதிருப்பதோடு, அதற்காக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆதரவாளர்கள் சிலர் கூட இன்று காலை யாழ். கச்சேரியின் முன்பக்கமாக தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்னர்.

எவ்வாறாயினும், வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயா மாஸ்டர் ஊடகங்கள் வாயிலா குறிப்பிட்டிருந்தார்.

தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக்காக சென்ற ஜூன் மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

வட மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியினர் பெயர் முன்மொழிவுக் குழுவினர் கொழும்பில் அன்றைய தினம் ஒன்றுகூடியபோது, யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயா மாஸ்டர் உள்ளிட்ட 23 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதற்கேற்ப தனக்கு ஸ்ரீ.சு.க உறுப்புரிமை கிடைத்ததாகவும், வட மாகாணசபையில் போட்டியிடுவதற்காக தனக்கு கிடைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கரத்துத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், தயா மாஸ்டரின் பெயர் கிடைக்கவில்லை எனவு்ம், அதுபற்றி அவர் ஸ்ரீசுத கட்சியின் மேலிடத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கூட்டணி கலந்துரையாடுகின்றது என்றும் கூறியுள்ளனர்.

ஆங்கில ஆசிரியராக தொழில் வாழ்க்கையில் நுழைந்த தயாமாஸ்டர் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எல்.ரீ.ரீஈ அமைப்பினருடன் சேர்ந்து யுத்தத்தின் இறுக்கட்டத்தில் (2009) இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

No comments:

Post a Comment