Monday, July 22, 2013

புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க விசேட ஸ்கேனர் இயந்திரங்கள்

யுத்தத்தின் போது கிளிநொச்சி பகுதி ஒன்றில் பெருமளவான தங்கம் மற்றும் நகைகளை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக ரான்சில் வாழும் தமிழர் ஒருவர், பாதுகாப்புத் தரப்பிற்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகள், பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் புலிகள் புதைத்து வைத்தவற்றில் குறித்த பகுதியில் தான் பெருந்தொகையான தங்கம் மற்றும் பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் இந்த தங்கம் மற்றும் பணத்தை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றை மீட்கும் பணியில் கனிமப் பொருட்கள் திணைக்களம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், இலங்கைச் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றில் இருக்கும் தங்கத்தைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரங்களின் உதவியுடன் கிளிநொச்சிப் பகுதியில் தங்க வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com