இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு ஆண்வாரிசு
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் நேற்று(22.07.2013 இரவு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததாக பக்கிங்கம் அரண்மனை உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நேரப்படி நண்பகல் 4.24 மணியளவில் சென். மேரிஸ் வைத்தியசாலையில் வைத்தே கேட் குழந்தையை பிரசவித்துள்ளார் பிறக்கும் போது குழந்தையின் நிறை 3.8 கிலோ எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வைத்தியசாலையிலேயே இளவரசி டயனா வில்லியம்ஸ் மற்றும் ஹெரியை பிரசவித்திருந்தார். இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அரச குடும்பத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், இதனை முழு பிரித்தானியாவும் கொண்டாடும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை பிறந்த செய்தி வெளியானதையடுத்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment