Sunday, July 7, 2013

இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் சட்டரீதியானவை! – முஸ்லிம் அமைப்பு

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் சட்டங்களுக்கு ஏற்றாற்போல அமைந்துள்ளன என தேசிய முஸ்லிம் சபை குறிப்பிடுகின்றது. அவ்வமைப்பானது அறிக்கையொன்றை வெளியிட்டு இதுபற்றித் தெளிவுறுத்தியுள்ளது. இவ்வனைத்து சட்ட ரீதியான அமைப்புக்களும் சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்குஅளப்பறிய சேவை புரிந்து கொண்டு அவர்களுடைய சமூக மற்றும் மதம் சார்ந்த விடயங்களில் வழிகாட்டுகின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்குரிய அரசியல், மத மற்றும் சுயேட்சை அமைப்புக்கள் பல இந்நாட்டில் உள்ளதாகவும், இவ்வனைத்து அமைப்புக்களும் இலங்கையிலுள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்றாற்போல, பாராளுமன்றத்தின் கட்டளைகளுக்கு ஏற்பவே இயங்குகின்றன. சமூக சேவைகள் திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களிலும் அவை பதிவாகியுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அறபு இஸ்லாமிய கலாபீடங்களின் மாணவர்களுக்காக பாடசாலைகளும், புனித அல்குர்ஆன் பயிற்றுவிக்கப்படுகின்ற மத்ரஸாக்கள் பலவும் இலங்கையில் உள்ளன. அவை அனைத்தும் குறித்த அரச நிறுவனங்களில் பதிவாகியுள்ளன.

அன்று தொட்டு இன்றுவரையில் உள்ள எந்தவொரு அறபுப் பாடசாலையோ இஸ்லாமிய அமைப்புக்களோ அரசாங்கத்திற்கு, அதன் சட்ட திட்டங்களுக்கு மாறாக நடந்துகொள்ளவில்லை. ஐக்கியத்திற்கு எதிராகச் செயற்படவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கவில்லை. இதனை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் தனது பேச்சுக்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் என்றும் நாட்டின் நன்மைக்கே தன்னை அர்ப்பணித்துள்ளது. இனங்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவே செயற்பட்டுள்ளது. நாட்டுக்கு உள்நாட்டு வெளிநாட்டுத் தலையீடுகள் வந்த வேளையிலெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் தங்களது தேசாபிமானத்தைக் சர்வதேசமே காணும் வண்ணம் காட்டியுள்ளனர். ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் கைகோர்த்து இந்நாட்டுப் பெரும்பான்மைச் சமூகத்துடன் வேறு எந் தவொரு இனமும் இல்லாதமுறையில் உறவுப் பாலத்தை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment