நடுக்கடலில் அகதிகள் படகு மாயம்!
தென்னிலங்கை மிரிஸ்ஸ என்ற இடத்தில் இருந்து கடந்த 17 ஆம் திகதியன்று அவுஸ்ரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படகு தொடர்பில் இலங்கை கடற்படைக்கு எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்காத நிலையில் படகில் சென்றோரின் உறவினர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கும் பப்புவா நியூகினிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான உடன்படிக்கையையும் கருத்திற்கொள்ளாது இந்த அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு படகுப் பயணத்தை ஆரம்பித்தாகக் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment