விக்னேஸ்வரன் தமிழ் நாட்டு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! சொல்கிறார்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள்.
ஒபாமாவுக்கான தமிழர்கள். இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவில்லை. ஆனால் தெளிவாக மின்னஞ்சல் ஊடாக சில பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். „தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தமிழ் நாட்டு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிறிதொருவரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிந்தெடுக்கவேண்டும்' என்பதும் அவர்களது இன்றைய பிரச்சாரமாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இலங்கையின் இராணுவத்தை நமது இராணுவம் என்றும் கடற்படையை நமது கடற்படை என்றும் குறிப்பிட்டதாகவும் அது சிங்களவர்களின் படையே என்றும் அவர்கள் விவாதிக்கின்றார்கள். இலங்கை இராணுவத்தை நமது இராணுவம் என்கின்ற ஒருவரை வட முதலமைச்சராக வர அனுமதிக்க கூடாது என்கின்றார்கள்.
மேலும் விக்னேஸ்வரன் தனது செவ்வியில் ஐக்கிய இலங்கையையே அவர் விரும்புவதாகவும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எங்களது பிரச்சினையை நாங்களே ஐக்கிய இலங்கைக்குள் தீர்த்துக்கொள்ள வழிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இவ்வாக்கியம் ஜனாதிபதி மஹிந்தவின் வாக்கியம் என்றும் ஒபாமாவுக்கான தமிழர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment