தோழர் குமரன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-
யாழ். மாதகலைச் சேர்ந்தவரும், பிரான்ஸில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் மரணமடைந்தமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. 78களில் காந்தீயம் ஊடாக மக்கள் சேவையினை ஆரம்பித்த தோழர் குமரன், விடுதலைப் போராட்டத்தின்; ஆரம்பகாலங்களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு கழக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார். அத்துடன் ஆரம்ப காலங்களில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்த அவர், பொதுவுடமை சித்தாந்தத்தில் தீவிர பற்றாளராகவும் திகழ்ந்தார்
புளொட்டின் மத்திய குழு உறுப்பினராகவும், தள அரசியல் செயலராகவும் 84 – 87 காலப்பகுதியில் செயற்பட்டு வந்த தோழர் குமரன், 1987 களின் இறுதிவரை தனது பணியினைத் தொடர்ந்தார்.
தோழர் குமரன் அவர்களின் மறைவு கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
21.07.2013.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
0 comments :
Post a Comment