Sunday, July 21, 2013

கோப்பி விரியன் பாப்புகள் அதிகமுள்ள மாகாணமாக மேல்மாகாணம்!

மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்பு கடிகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசிய மென இலங்கையின் முன்னணி விலங்கியல் நிபுணர் என்ஸ்லம் டி சில்வா கேட்டுள்ளார்.

கோப்பி விரியன் பாம்புகள் பெருமளவில் கிராம புறங்களையே தமது வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் அநேகம் கோப்பித் தோட்டங்களில் கோப்பி இலைகளின் மேல் சுருண்டு காணப்படும்.

இந்தப்பாம்புகள் நேரடியாக குட்டிகளை ஈனுபவை என்பதுடன் சாதாரணமாக ஒரு கோப்பி விரியன் ஆகக்கூடியது 10 விரியன் குட்டி களை ஈனும். இருப்பினும் அண்மையில் ஒரு விரியன் 30 குட்டிகளை ஈன்று சாதனை நிலைநாட்டியுள்ளது.

கோப்பி விரியன் பாம்புகள் சுமார் 30 தொடக்கம் 60 சென்ரி மீற்றர் வரையான நீளம் கொண்டவைஎன்பதுடன் விழுந்த இலைகள், குப்பைக்கூளங்களுடன் சுருண்டு காணப் படுவதனால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வது கடினமாகும்.

கண்ணாடி விரியன்கள் தீண்டுவதனால் 40 சதவீதமானவர்கள் உயிரிழக்க கூடிய சந்தர்ப்பத்தில் கோப்பி விரியன்களால் 02 சதவீதமானவர்கள் மாத்திரமே உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிப்பதுடன் கோப்பி விரியன்கள் உணர் திறன் மிக்கவை ஆகையினால் இரத்தம் சுவைப்பதற்காக பிராணிகள் இருக்கும் இடங்களை தேடி வரக்கூடியவை என்பதுடன் இலங்கைக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிராணியாகும்.

No comments:

Post a Comment