சம்பந்தன் ஜயா சமாதான வழியையோ அல்லது நந்திக்கடல் வழியையோ தேர்ந்தெடுக்கலாம் -சம்பிக்க
"முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்து துரத்தி அடித்த போது முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கி ருந்தார்"
இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் சம்பந்தன் ஜயா, சிங்கள இனத்துடன் பயணம் செய்ய சமாதானப் பாதையையோ, அல்லது பிரபாகரன் சென்ற நந்திக்கடல் பாதையையோ, தேர்ந்தெடுக்க முடியுமென்று அமைச்சர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதே போல் மக்கள் முன் வீரனாக துடிக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் தேர்ந்தெடுக்க இரண்டு வழிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜாத்திக்க ஹெல உறுமயவின் குருநாகல் மாவட்ட சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடமேல் மற்றும் மத்திய மாகாண தேர்தல்களுக்கு எதிர்ப்பு தெரிக்காமல் வடமாகாண தேர்தலுக்கு மாத்திரம் எதிர்ப்பு தெரிவிப்பதன் மர்மம் என்னவென சிலர் எம்மிடம் கேட்கின்றனர். எமக்கு வடக்கு பற்றியே பிரச்சினை இருக்கின்றது எனவும், சம்பந்தனின் இனவாதமே எமக்குப்பிரச்சினை எனவும், அவரது அரசியல் பற்றியே எமக்குப் பிரச்சினை இருக்கின்றது என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் எம்மால் ஒரு விடயத்தை கூற முடியும். சம்மந்தன் ஜயாவுக்கு இரண்டு பாதைகள் உண்டு எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள இனவாதிகளுக்கு செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு எனவும், தமிழ் மக்களின் வரியை கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஏ 9 வீதியில் குருநாகல் வந்து மீன் மரக்கறிகளை விற்று சீவிக்கலாம். அதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. இல்லையேல் பிரபாகரன் சென்ற பரந்தன் புதுமாத்தளன் வரையுள்ள நந்திக்கடல் பாதையில் செல்லலாம். எதில் வேண்டுமானாலும் செல்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.
அத்துடன் இன்று இதில் ஹக்கீமும் இணைந்துள்ளார். தாம் ஒரு உறுதியான இனம் என்றும் எந்த ஒரு சக்திக்கும் அடி பணியமாட்டோம் என்றும் கூறுகின்றார். முதுகெலும்புள்ள ஒரு கட்சி என்றும் கூறுகின்றார்.
பிரபாகரன முஸ்லிம்களை கொலை செய்து துரத்தி அடித்த போது முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கிருந்தார் என்றும் அமைச்சர் சம்பிக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிராசகுலம் பள்ளிவாசலை எல்.ரீ.ரீ.ஈ கைப்பற்றி அங்கு முகாம் அமைக்கும் பேர்து முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கிருந்தார். அன்று ஒரு முஸ்லிம் கிராமத்திற்கு எம்முடன் செல்ல ஒரு அரசியல்வாதியாவது வந்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment