Tuesday, July 16, 2013

ஸ்னோவ்டனை சிறைப்படுத்த அமெரிக்க நிர்பந்தித்துள்ளது. சாடுகின்றார் ரஷ்ய ஜனாதிபதி.

அமெரிக்க இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டன் அமெரிக்காவின் மூலமே ரஷ்யாவில் சிறைபடுத்தப்பட்டுள்ளார் என ரஷ்ய ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எட்வர்ட் ஸ்னோவ்டனின் கடவு சீட்டை இரத்து செய்தும் அவருக்கு தஞ்சம் அளிக்க வேண்டாம் என நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தும் அவரை அமெரிக்கா சிறைப்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்னோவ்டன் ரஷ்யாவிலிருந்து வெளியேற முயன்ற போது அமெரிக்கா அவருக்கு எதிராக செயற்பட்டதாக புட்டின் தெரிவித்துள்ளார். ஆனால் விரைவில் அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஸ்னோவ்டன் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவார் என ரஷ்ய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்னோவ்டனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்குமாறு சுவீடன் தேசிய சமூக விஞ்ஞானி ஒருவர் நோர்வே நோபல் விருது குழுவுக்கு சிபாரிசு செய்துள்ளார். ஸ்னோவ்டன் அடிப்படை உரிமை மீறல் மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக செயற்பட்டுள்ளார் எனவும் அவ்விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment