மாவிட்டபுரத்து சேனாதி அம்பாறைக்கு பாயலாம் என்றால் திருகோணமலை விக்னேஸ்வரன் ஏன் வடமாகாணத்துக்கு தாவக்கூடாது? சம்பந்தன் ஆவேசம்
தமிழ்த் தேசிய கூடமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் இருந்துவந்த முட்டிமோதல் பேரம்பேசல்களுடன் முடிவுக்கு வந்திருக்கிண்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நியமிக்குமாறு கூட்டமைப்பில் இருக்கும் அனேகமானோர் கோரிக்கை முன்வைத்தபோதும் அவர்கள் அனைவரதும் கோரிக்கைகளை குப்பைக்கூடையில் வீசிய சம்பந்தனார் தன்னிச்சையாக திரு.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
திரு.விக்னேஸ்வரன் அவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும் அவரை ஏன் கிழக்கு மாகாணசபையில் போட்டியிடவைத்திருக்கலாம்தானெ என கூட்டமொன்றில் சம்பந்தனை நோக்கி சொற்கணை ஒன்று ஏவப்பட்டிருக்கின்றது. இக்கேள்விக்கு ஆவேஷத்துடன் பதிலளித்த சம்பந்தன் மாவிட்டபுரத்தை சேர்ந்த சேனாதிராசா அம்பாறையில் தேர்தலில் நிற்கமுடியுமானால் விக்னேஸ்வரன் வடமாகாணத்தில் போட்டியிடுவதில் என்ன தவறென் கேள்விக்கணை தொடுத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியை தனியாக சந்தித்த சம்பந்தனிடம் விக்னேஸ்வரனையே முதன்மை வேட்பாளராக நியமிக்குமாறு மகிந்தராஜபக்ஸ கூறியதாகவும் எனவே ஜனாதிபதியை பகைக்க விரும்பாத சம்பந்தன் விக்னேஸ்வரனையே நியமிக்கவுள்ளதாகவும் மின்னல் ரங்கா சிலனாட்களாக மின்னிவருவதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயமாகியுள்ளது.
இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் தன்னை ஓரு தமிழ்த் தேசியவாதியாகக் காடிக்கொள்ளும் சம்பந்தன் தனது சுய தேவைகளுக்காக ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ பகைத்துக்கொள்ளமாட்டார் என்பதனை இனியாவது வடக்கு கிழக்கு மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
தேர்தலுக்கு முன்னரே சுரேஸ் சம்பந்தன் உடன்பாடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெரும்பாலானோர் சேனாதியை நியமிக்குமாறு ஒன்றுபட்டிருந்த நிலையில், பதவிக்காக எதனையும் செய்யக்கூடிய மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பந்தனை இரகசியமாக சந்தித்து ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அதாவது மாகாண சபையை கைப்பற்ற முடிந்தால்; கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக தொழில் புரியும் தனது தம்பி சர்வேஸ்வரனுக்கு வடமாகாண சபையில் மிக முக்கிய அமைச்சு பதவியை தர தயார் என்றால் நீங்கள் சொல்கின்ற வேட்பாளரை ஏற்க நானும் தயார் என்றுள்ளார்.
சும்பந்தனார் தலை அசைக்கவே டீல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை உதறித்தள்ளிவிட்டு சம்பந்தன் விருப்பப்படியே திரு.விக்ணேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க ஆதரவு வழங்குவதாக தலையாட்டியுள்ளார் பிரபல மதுபான வியாபாரி சுரேஸ் பிரேமச்சந்திரன்.
எது எவ்வாறாயினும் தனது உறவினரான விக்னேஸ்வரனை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கவேண்டும் எண்ற ஆதங்கத்தில் சுரேஸின் கோரிக்கைக்கு தலையாட்டியுள்ள சம்பந்தனால் அதை நிறைவேற்ற முடியாது போனாம் வேதாள் முருங்கையில் ஏறும் என்பது நான்சொல்லவேண்டிய தேவை இல்லை..
இலங்கை; இந்தியா மற்றும் சர்வதேசநாடுகள் எல்லாம் சுற்றித்திரிந்து தமிழ் மக்களை பகடைகளாக வைத்து பணம் சம்பாதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் சுய நலங்களும் பதவிமோகங்களும் எமது அப்பாவித் தமிழினத்திற்கு என்று புரிகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு உண்மையான விடுதலை கை கூடும்.
எஸ்.எஸ்.கணேந்திரன்
1 comments :
தமிழ் கூத்தணியில் சம்பந்தன் ஐயாவை தவிர விவேகமான, பொதுநல அரசியல்வாதிகள் ஒருவரும் இல்லை. எனவே எல்லோரையும் புரிந்துகொண்ட
சம்பந்தன் ஐயா திரு.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம்.
இப்படியாக பழைய சாக்கடைகளை விட்டு, புதிய நல் மனிதர்களை மாகாண சபை அமைச்சர் பதவிகளுக்கும் தேர்வுசெய்து தொடர்ந்தும் தமிழர்களின் அபிலாசைகளை எங்கள் ஐயா பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
Northern people
Post a Comment