வவுனியா 'விடியல் கல்வி அறக்கட்டளை' அமைப்பு தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்தது (படங்கள் இணைப்பு)
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "விடியல் கல்வி அறக்கட்டளை" அமைப்பு தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது.
வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழிகாட்டி புத்தகங்களை இவ்வமைப்பு வழங்கியது.
இன் நிகழ்வினை பாடசாலை பிரதி அதிபர் திருமதி. த. யுகராஜா ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. சு. வஸ்தியாம் பிள்ளை இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதி அதிபர், அதிபர், விடியல் அமைப்பின் தலைவர் கி. பிரணவன், உப தலைவர் சி.சிவதர்சன், பொருளாளர் அ.அனுசியன் செயற்குழு உறுப்பினரும் அப்பாடசாலை ஆசிரியருமான சே.நிமலன் ஆகியோர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment