Saturday, July 27, 2013

மனைவியை இந்தியாவிலிருந்து துரத்திவிடுவதாக மாவைக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மனைவியை இந்தியாவிலிருந்து விரட்டிவிடுவதாகவும், அவ்வாறு செய்யாமலிருக்க வேண்டுமென்றால் சீ.வீ. விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அதிகாரம் மிக்க இந்தியர்கள் பலர் மாவை சேனாதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வட மாகாண சபையின் முதலமைச்சரின் பெயரை முன்மொழிவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிபிடப்படுவதுடன், அமெரிக்கத் தூதுவராலயமும் விக்னேஷ்வரனை முதலமைச்சர் அபேட்சகராக்குவதற்காக பாரிய முன்னெடுப்புக்களைச் செய்துவருகின்றது என்பதும் தெரியவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவராலயம் பலமுறை முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அறியக்கிடக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்து, இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்கின்ற சீர்திருத்த யுத்தத்திற்காக மிகவும் பொருத்தமானவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஷ்வரனே என்பது அமெரிக்காவின் கருதுகோளாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், பல கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை விருப்பாக இருப்பது என்னவென்றால், மாவை சேனாதிராவை வட மாகாண முதலமைச்சராக்க வேண்டுமென்பதே. சேனாதிராஜாவும் இதற்கு விருப்புத் தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளை, இந்தியாவின் ரோ இரகசிய சேவை தலையிட்டு, இந்தியாவில் வசிக்கின்ற அவரின் மனைவியை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்புத் தன்பக்கம் இருக்கின்றபோதும் ரோவின் தலையீட்டினால் தன் மனைவி மீது இருக்கின்ற பாசத்தினால் மாவை சேனாதிராஜா தனது குறிக்கோளை கைவிட்டுவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment