இலங்கை துதரகத்திற்கு அச்சுறுத்தல்! பாதுகாப்பு பனமடங்காக அதிகரிப்பு
இனந்தெரியாத குழுவான்றினால் இன்று தாக்குதல் நடத்தப்படும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லாஹ் கான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்த்திற்கு அச்சுறுத்தல் அடங்கிய அட்டையொன்று (12.07.2013) வெள்ளிக்கிழமை கிடைத்ததாக குறிப்பிட்ட சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அந்த அட்டையில் இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படும் என தமிழ மொழியில் குறிப்பிடப்பட்டிருந்ததா லேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அச்சுறுத்தல் அடங்கிய தபால் அட்டை தமிழக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment