Wednesday, July 10, 2013

ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் யாருமில்லை... இலங்கைக்கு வருவதெல்லாம் ஆற்றுக் கபரகொயாக்கள் போன்றவர்கள்!

‘ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் யாரும் இலங்கைக்கு வருவதில்லை. இலங்கைக்கு ஆற்றுக் கபரகொயாக்கள் போன்ற தலைவர்களே இன்று வருகின்றார்கள்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க மாத்தளையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு புகழ்மிக்க, சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த நாடும் அழைப்பு விடுப்பதில்லை. என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை தேர்தல் தொகுதியில் தொகுதியைப் பலப்படுத்துவதற்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

‘அரசாங்கத்திற்கு இப்போது உதவி தேவைப்பட்டுள்ளதால் அவர்கள் உதவி தேடிக்கொண்டு ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளுக்குச் செல்கிறார்கள். ஜனாதிபதி உள்ளிட்ட அரசு தங்களுக்குப் புள்ளிகளைக் கூட்டிக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு எம் நாட்டு மக்களின் வரிகளை உதவியாகக் கொடுத்துள்ளனர். இவ்வாறான நகைப்பிற்குரிய விடயம் வரலாற்றில் ஒருபோதும் நடைபெறவில்லை.

இவ்வாறு வழங்கி எமது நாட்டு மக்களை அடகுவைத்து அரசாங்கம் பல்வேறு நாடுகளிலிருந்து தூக்கமுடியாத வட்டிக்குக் கடன் வாங்குகின்றதென்பதை மறக்க வேண்டாம். இருண்ட யுகத்தில் இருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கின்ற முதல் கட்ட நடவடிக்கை மத்திய மாகாண சபைத் தேர்தலிலிலிருந்து ஆரம்பமாகப் போகின்றது.’ என்றும் ஐதேக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  July 11, 2013 at 7:01 AM  

We can talk a lot and blame each other for the country`s ill.But time to time during different regimes,the inflation had gone up,as a result the cost of living index had increased to an unimaginable level.Two major parties UNP and SLFP conducted the shows as the government even now they run the government.To develop the country`s economy both the government and the strong opposition party must talk together
work together as a result you may see a prosperous Srilanka. power struggle or hunger never bring prospertiy to the country.Poor citizens of the country cannot suffer anymore.

Anonymous ,  July 11, 2013 at 7:16 AM  

If he comes to the power,he might invite the top leaders into the country.Sure,he will forget the Iguanas.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com