விக்னேஸ்வரன், வராவெவ கொடுத்த தீர்ப்புக்கள் பற்றி மீள்பரிசீலனை வேண்டும்!
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய சீ.எம். விக்னேஸ்வரன், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஆகியோர் நீதிமன்றில் சேவைபுரிந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணத்திற்கும், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மத்திய மாகாண சபைக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட முன்வந்துள்ளது தொடர்பில் இச்சந்தேகம் எழுந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிடுகிறார்.
தேர்தல் வேட்பாளர்களாக அவர்களின் பெயர்கள் முன்மொழியப்படுவதற்கு முன்னரேயே அவர்கள் அரசியல் ஆழக் காலூன்றியிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர், அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் நீதியானவைதானா என்பது பற்றி அலச வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment