Friday, July 12, 2013

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி! கூட்டமைப்பு பல பிரிவுகளாக பிளவுபடும் நிலை!

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் த.தே.கூட்டமைப்பிற்குள் இழுபறி நிலை ஏற்ப் பட்டுள்ளதுடன், இதனால் கூட்டமைப்பு பல பிரிவுகளாக பிளவுபடும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் 3 பிரிவுகள் உருவாகியுள்ள இந்நிலை யில், த.தே.கூ. 3 ஆக பிளவுபடலாமென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கூட்டம் தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபைக்கு முன்னாள் நீதியரசர் சி.விக்னேஷ்வரனை கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென சம்பந்தன் முன்மொழிந்துடன் அவரையே நியமிக்க வேண்டுமெனவும் சம்பந்தன் விடாபிடியாகவிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கு ஏனைய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் தமது கருத்தில் ஆணித்தனமாக இருந்ததால் சம்பந்தனுக்கும், ஏனையோருக்குமிடையில் மோதல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேவேளை மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை ஏற்ப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  July 12, 2013 at 11:29 AM  

The power struggle is playing a main role.Not that they try to do something to the people of the northernprovince.Selfdefeating,,selfishness,greediest behaviour and gnashing their teeth cannot bring any benefits to the people of the north.This is what`s happening from the period of late power hungered tamil political leaders.Do you think these bngus guys would do a good job to the tamil people, Never .Let them divide into three or thirty groups,it doesn`t matter but the voters duty is to elect the best one,who can do a honest job to the people of Jaffna.The entire TNA lot is a curse to the tamil society.This is what we had learnt
every now and then.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com