Wednesday, July 3, 2013

அனர்த்த முகாமைத்துவத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்!

அனர்த்தங்களிலிருந்து பொதுச் சொத்துக்க்கள், பொதுமக்கள், இயற்கைச் சூழல் போன்றவற்றை பாதுகாப்பது அனர்த்த முகாமைத்துவத்தின் இலக்காகும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தொரமடலாவ’ எனும் நிகழ்ச்சிக்கு அளித்தநேர்காணலில் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவத்தில் பாதுகாப்பு படையினரின் கடமைகளும் பொறுப்புக்களும் என்பதே நிகழ்ச்சியின் மையக்கருத்தாகும்.

கடந்த காலங்களில் அணர்த்தமுகாமைத்துவ நிலையமானது பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து முன்னேற்பாடுகளை செய்ததன் மூலம் பல அனர்த்தங்களை வெற்றிகரமாக கையாளக்குடியதாக இருந்தது என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்தங்களை கருதும்போது இயற்கை அனர்த்தம் மற்றும் மனிதனால் மேற்கொள்ளப்படும் அனர்த்தம் என இரண்டாக வகைப்படுத்தலாம் என்று செயலாளர் குறிப்பிட்டார். மக்கள் சதுப்பு நிலங்களில் சட்டவிரோத கட்டங்களை நிர்மாணிப்பதன் மூலமும் வடிகால்களிலும் மதகுகளிலும் குப்பைகளை தேங்கச் செய்வதன் முலமும் அனர்த்தம் உருவாகக்கூடிய சூழலை உருவாக்குகின்றனர் எனவே மக்கள் இவ்வாறான அசாதாரண சூழலை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

கால்வாய்களையும் நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் பசுமையாகவும் கண்ணைக்கவரும் இடங்களாக நகரங்கள் மாறும். நீர் நிலைகளிலிருந்து சட்டவிரோதமாக குடிசைகளுக்கு பள்ளத்தாக்குகளை ஏற்படுத்தி நீரை திருப்பி விடுதல், கால்வாய்களை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் அவர்கள் மாத்திரமின்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினரும் ஆபத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.

அனர்த்தங்களின்போது உயிர்களைப் பாதுகாப்பதற்காக அணர்த்த முகாமைத்துவமானது உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன என கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது செலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com