இலங்கை அரசிற்கு எதிராக சாட்டப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்கிடம் தெரிவித் துள்ளதாக , த நியூ ஸ்ட்செய்ட் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள்காட்டி கொழும்பு எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின்போதே மேற்கண்ட வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் இலங்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய நியாயமான மதிப்பீடொன்றை ஏனைய நாடுகளும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி ராஜபத நம்பிக்கை வெளியிட்டார்.
No comments:
Post a Comment