'பிரிவினை வாதம்' ஒன்றே தான் அனைத்துக்குமான தீர்வு என்பதனை கூட்டமைப் பினர் தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலைப் பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமை ப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காது பகிஷ்கரிப்பதாக வீடமைப்பு பொறியியல் மற்றும் நிர்மா ணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஓரங்கட்டுவதன் மூலம் "பிரிவினை வாதம்" ஒன்றே தான் அனைத்துக்குமான தீர்வு என்பதனை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எத்தகைய தீர்மானத்தை முன்னெடுத்த போதிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி கூடுவதில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் பங்குபற்றி தமது கருத்துக்களை முன்வைக்காத விடத்து அரசாங்கத்துடன் பேசுவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடுகின்றது என்றே கூற வேண்டுமெனவும் அமைச்சர் விமல்தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமது கருத்து மற்றும் நிலைப்பாட்டினை தெரிவுக்குழுக்கு முன்வைக்காத வரை அரசாங்கத்தினால் அவர்களது நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியாமல் போகும். அத்துடன் எதற்குமே தீர்வுகிட்டாது எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் உரிய முறையில் பேச்சு நடத்தி எதற்கும் நிரந்தர தீர்வு காண்பதனை விடுத்து எதனையும் பிரச்சினைகளாக உருவாக்கி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே கூட்டமைப்பினரின் ஒரே விருப்பமாக இருக்கிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment