Monday, July 1, 2013

எவர்வந்தாலும் வராவிட்டாலும் திட்டமிட்டபடி தெரிவுக்குழு கூடுவது உறுதி - நிமல்

"தமிழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது"

எவர்வந்தாலும் வராவிட்டாலும், எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி ஜுலை 09 ஆம் திகதி கூடுவது உறுதியென, குழுத் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சர்வதேசமும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை நடை முறைப்படுத்துவதிலிருந்து விலகாது எனவும், தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றப் போவதில்லையென அறிவித்திருக்கிறது அதுவொரு புதிய விடயமல்ல எனவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், நாங்கள் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக எம்மால் எதனையும் செய்ய இயலாது எனவும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தற்போது 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தெரிவுக் குழுவுக்கென ஒரு பேரவையுண்டு. எனவே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளாதவிடத்தும் கூட எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது. தெரிவுக் குழுவினை எதிர்க்கட்சி கள் பகிஷ்கரித்தாலும், பேரவையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எம்மிடம் இருக்கும் 19 உறுப்பினர்களும் போதுமானவர்களாவர் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை பகிஷ்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com