91 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் பதவி நீக்கம்! பெற்றோர் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் ???
புதிதாக பாடசாலைக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வ தற்காக 91 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட அதிபர் ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை பதவியி லிருந்து நீக்கியுள்ளோம் என என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் குறித்த அதிபரை குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானித்துக்கு அமை யவே நாம் பதவியிலிருந்து நீக்கியுள்ளோம், ஆனால் குறித்த அதிபரை பதவி நீக்கியதற்கு எதிராக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெற்றோர் ஏன் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் எனவும், இது எந்த வகையில் நியாயமாகும்? எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பினார்.
காலி பத்தேக கிறிஸ்து தேவ மகளிர் கல்லூரியின் 125 ஆவது வருட நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அடுத்த தவணைக்காக பாடசா லைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக சகல அதிபர்கள் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் அதிபர்கள் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடனேயே தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், குற்றமிழைத்த அதிபர்களை வேலை நீக்கம் செய்தால் அதற் கெதிராகவும் வீதியில் இறங்க ஒரு சாரார் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளுக்கான "மஹிந்தோதய வித்யாகார" திட்டத்துக்காக அரசாங்கம் 4000 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கல்வித்துறையின் ஒரு திட்டத்துக்காக இந்தளவு அதிக நிதியை செலவிடும் அரசாங்கம் இதுவெனவும், வரலாற்றில் முன்னொரு போதும் இது போன்று நிகழ்ந்ததில்லை எனவும், கல்வித்துறை மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார் எனவும், அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment