7.2 கோடி வயதுடைய டைனோசரின் வால் சிக்கியது
மெக்சிகோ நாட்டு பாலைவனம் ஒன்றில் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் வால் பகுதி படிமமாக கிடைத்துள்ளது. அந்த வாலுக்குரிய டைனோசரின் உடல் எங்கேயாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
மிகவும் அரிதாக இந்த வால் பகுதியானது முழுமையாக, பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவில் டைனோசரின் படிமம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாசில் எனப்படும் படிம வடிவில் கிடைத்துள்ளது இந்த வால் பகுதியானது 5 அடி நீளத்திற்கு உள்ளது என்பதுடன் மெக்சிகோவில் கிடைத்த முதல் டைனோசர் படிமம் என்பதுடன் இது டைனோசரின் ஒரு வடிவமான ஹாட்ரசோர் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த வால் பகுதியின் எலும்புகள் அப்படியே கல்லாகியுள்ளதுடன் பாறை வடிவில் காணப்படும் இவை அனைத்தும் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளதுடன் வால் பகுதிக்கு அருகில் சில எலும்புகள் சிதறிக் கிடந்ததுடன் இவை அந்த டைனோசரின் இடுப்பு பகுதி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
0 comments :
Post a Comment