68 இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸியிலிருந்து நாடு கடத்தல்
அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 68 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் அவுஸ்திரேலியாவிலோ அல்லது பப்புவா நியூகினி தீவிலேயோ குடியமர்வதற்கோ அல்லது தங்குவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவ்வாறானவர்களை பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்புவது தொடர்பில் கடந்த 19ஆம் திகதி இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைய முதலாவது குழுவினர் பப்புவா நியூகினிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் வரும் இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பாவிட்டால், அவர்கள் பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.
0 comments :
Post a Comment