களியாட்ட விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 6பெண்கள் உட்பட 8 பேர் கைது
கட்டுநாயக்க சீதுவை பகுதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியொன்றில் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பெண்கள் உட்பட எட்டு பேரை திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் சீதுவைப் பகுதியில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் விபசாரம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்தகளியாட்ட விடுதியினை நேற்று அதிகாலை முற்றுகையிட்டனர் எனக்குறிப்பிடார்.
இங்கு விசேட பிரதிநிதிகளுக்கான 25 ஆயிரம் ரூபா பெக்கேஜ் முறை காணப்படுவதுடன் பெக்கேஜ் ஒன்றினை களியாட்ட விடுதியில் பெற்றுக் கொண்டால் உயர் ரக மதுபானங்கள் மற்றும் பெண்கள் விபச்சாரத்துக்காகவும் வழங்கப்படுவதுடன் விபச்சாரத்துக்காக வரும் பெண்ணுக்கு 6 ஆயிரம் ரூபாவை வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டும்.
இதனூடாக எமது அதிகாரிகள் குறித்த களியாட்ட விடுதியை முற்றுகையிட்ட போதே ஆறு பெண்களும், இரண்டு ஆண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம் எனக்குறிப்பிட்டார்.
இப்பெண்கள் அனைவரும் அநுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதாகக் கூறியே மேற்படி களியாட்ட விடுதியில் பணி புரிந்துள்ளது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆ ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் என்று குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment