Monday, July 15, 2013

மின்சாரப் பட்டியலை ஒரேதடவையில் 50% இனால் அதிகரித்த ஒரே நாடு இலங்கையே!

புதிய மின்சாரப் பட்டியலின் கணக்கு மீள்சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் இலங்கையருக்கு நாளொன்றுக்கு 117 கோடி ரூபாவை செலவுசெய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக மின்சாரத் திணைக்களத்தின் முன்னாள் மின்சாரப் பொறியியலாளரொருவர் மனுவொன்றின் மூலம் உயர் நீதிமன்றத்திற்குத்தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் ஒரேயடியாக நூற்றுக்கு 50 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள உலகின் ஒரே நாடு இலங்கை என்பதையும் அவர் அம்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை நீக்குமாறுகோரி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக வேண்டி இந்த மனுவை மின்சார சபையின் முன்னாள் மின்சாரப் பொறியியலாளரான மார்க்ஸ் வின்சண்ட் பெரேரா என்பவரே உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment