Saturday, July 20, 2013

யாழில் சிறப்பாக நடைபெறும் 41 இலக்கிய மாநாடு

ஆவது இலக்கியச் சந்திப்பு யாழ் யூரோவில் மண்டபத்தில் ரெங்கன் தேவராஜன் தலைமையில் இன்று(20.07..2013) காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது.

அதிகாரத்திற்கும் அத்துமீறல்களுக்கும் எதிரானதாக தொடர்ச்சியாக 25 வருடங்களுக்களாக இலக்கியவாதிகள் குரல்கொடுத்து வருகின்ற நிலையில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

41 ஆவது இலக்கியாயச் சந்திப்பில் பேச மறைக்கப்படும் விடயங்கள், பேச மறுக்கப்படும் விடயங்கள், பேசாமல் மறைக்கப்பட்ட விடயங்கள் போன்றவற்றை ஒரு அரங்கில் இருந்து வாதப் பிரதி வாதங்கள் ஊடாக ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்வாக நடைபெறுகிறது.

இம்முறை இலக்கியச் சந்திப்பில் இலக்கியம், அரசியல், சாதியம், பெண்ணியம், அடங்கலாக பல விடயங்கள் பேசப்படுகிறது.

அறிமுகத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு எழுதிய என் எழுத்து என்னும் நூல் பற்றிய பார்வையுடன் ஆரம்பமாகி பாரம்பரிய கலைகளும், பண்பாடு, முஸ்லீம்களின் பாரம்பரிய கலைகள், பெண்களும் ஆன்மீக ரீதியிலான கலாசாரமும், அசன்பே சரித்திரத்தின் வரலாற்று விடுபடலும் முஸ்லிம் தேசிய இலக்கிய மரபின் தனித்துவமும், மட்டக்களப்புப் பாரம்பரிய கலாச்சாரப் பண்புகள், முஸ்லிம் பண்பாட்டுருவாக்கங்களும் அண்மைக்கால நெருக்கடிகளும் குறித்து கருத்துரைகளை வழங்கினார்.

தொடர்ந்து பாரம்பரிய கலைகளும், பண்பாடும் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதுடன் தெடர்ந்து 'பள்ளிக்கூடம்' என்னும் நூல் அறிமுகம் நடைபெற்றதை தொடர்ந்து 41வது இலக்கியச் சந்திப்பு அடையாள மலரான குவர்னிகா என்னும் மலர் வெளியீடு நடைபெற்றது.

தொடர்ந்தும் சாதியம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் சாதியம் குறித்து தெணியானும், மட்டக்களப்புச் சாதி அமைப்பும் அதன் இன்றைய நிலை, தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, கல்வியும் சாதிய ஒடுக்குமுறை,சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் குறித்தும் உரையாற்றிக்கொண்டு இருக்கின்றன.

இரண்டாவது நாள் நிகழ்வுகள் நாளை(21.07.2013) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பிலும் பல்வேறுபட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு நாள் நிகழ்வுகளிலும் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பல இலக்கிய வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment