மிருகக்காட்சி சாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனகொண் டா
கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா இன பாம்பொன்று 31 குட்டிகளை நேற்றிரவு ஈன்றுள்ளதுடன் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டா பாம்பொன்று குட்டிகளை ஈனுவது இது 3 ஆவது தடவையாகும்.
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள அதிகமான அனகொண்டா பாம்பின குட்டிகள் விலங்குப் பரிமாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பரிசளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment