இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பாக். தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்: ராணுவ அதிகாரி 'திடுக்' தகவல்
இந்தியாவுக்குள் ஊடுருவ தகுந்த நேரத்தை எதிர்பார்த்து பாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள் காத்துக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவ உயரதிகாரி கூறியுள்ளார். ஜம்மு பகுதியில் முனவர் தவி ஆற்றின் மீது இந்திய ரூபா.12 1/2 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழாவின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா கூறியதாவது:
நமது நாட்டுக்குள் ஊடுருவ நினைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நமது எல்லைக்குள் நுழைந்து சோதனைச் சாவடிகளில் காவல் காக்கும் இந்திய ராணுவ வீரர்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபோன்ற பல முயற்சிகள் இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள எதிரிகள், நமது ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். எல்லைக் கோட்டுப் பகுதியில் நமது வீரர்கள் நடமாடும் இடங்களில் கண்ணி வெடிகளை புதைத்து அட்டூழியம் செய்கின்றனர்.
10 பேர் கொண்ட குழுக்களாக சுமார் 250 முதல் 300 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பூஞ்ச் எல்லைக் கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment