இந்நாட்டில் 2 இலட்சம் ரிஸானாக்களின் தலைகள் சீவப்படுகின்றன....! – கல்வியமைச்சர்
‘மத்திய கிழக்கில் கொலை செய்யப்பட்ட ரிஸானா பற்றி எல்லோரும் பேசினாலும், ஒரு வருடத்திற்கு இலங்கையில் பிறக்கின்ற இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ரிஸானாக்கள் பொருத்தமற்ற பரீட்சை அமைப்பு முறையினால் தலை சீவப்படுகின்றனர் என்றாலும் அதுபற்றியாரும் பேசுவதற்குத் தயாராக இல்லை.’ என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
மொரட்டுவை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், ஜேர்மன் டெக் பல்கலைக்கழக கல்விப்பீடத்திற்கு அடிக்கல் வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறு பத்து வருடங்களில் இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை மாணவர்கள் நட்டாற்றில் விடப்படுவதுடன், இதற்குப் மாற்றுப் பரிகாரகமாகவே தொழில்நுட்ப்ப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவினுள் உயர்வாக மதிக்கப்படுகின்ற ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் பாடநெறிகள் முழு உலக நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளபடும் வகையில் செய்வதற்கே பல்கலைக்கழக கல்விப்பீடம் ஆரம்பிப்பதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment