பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஆற்றில் விழுந்தது: 2 விமானிகள் மாயம்
பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த இரண்டு விமானிகள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
கைபர் பாக்துங்க்வா மாகாணம் ஸ்வாபி மாவட்டத்தில் சோட்டா லாகூர் அருகே அந்த விமானம் சென்றபோது, திடீரென அதன் பாதையைவிட்டு விலகி, இந்துஸ் நதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானியை பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள். நீரில் மூழ்கி தேடும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் விமானத்தின் பின்பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. காக்பிட் பகுதி தண்ணீருக்குள் மூழ்கியிருக்கிறது. விமானிகள் இருவரையும் காணவில்லை என்று மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment