அரச துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27,000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. அபேகோன் தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பட்டதாரிகளுக்கு அந்தத்தப் பிரதேசத்திலேயே நிரந்தர நியமனப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்தில் பட்டதாரியொருவர் தகைமை அடிப்படையில் உள்வாங்கப்பட்டு பட்டதாரி பயிலுனர்களாக ஒருவருட பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு ஒரு வருட பயிற்சியை முடித்துக்கொண்டவர்களில் இதுவரை 20,000 க்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 27,000 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தன மற்றும் அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டுவந்தது. இது தொடர்பில் வினவியபோதே அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment