யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளின் பின்னர் ரமழான் இப்தார் நிகழ்வு.
யாழ் பல்கலைக்கழகத்தில் 20 வருடங்களுக்கு பின்னர் ஸபாப் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு மாணவர் பொது அறை மண்டபத்தில் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது. அமைப்பின் தலைவர் எம்.சர்ஜுன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்விற்கு அதிதிகளாக விஞ்ஞான பீடாதிபதி எஸ் சற்குணராஜா, கலைப்பீட சிரேஸ்ட பதிவாளர் கே.ஞானபாஸ்கரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கே.தபோதரன், யாழ் கல்வி வலய உத்தியோகத்தர் அப்துல் ஜலீல், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வருகை தரும் விரிவுரையாளருமான அஷஷெய்க் பைஸர் மதனி ஆகியோருடன் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முதலில் ஹிராஅத் ஒதலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வு அதிதிகளின் உரை மற்றும் மார்க்க சொற்பொழிவுடன் தொடர்ந்து இறுதியாக இப்தார் நிகழ்வு நிறைவடைந்தது.
இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி கற்கும் மருத்துவ, விஞ்ஞான , வர்த்தக,கலைப்பீடம் என 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாசிப்புலிகளால் யாழ் மண்ணிலி்ருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள நிலையில் இந்நிகழ்வு இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
(பாறூக் சிகான்)
0 comments :
Post a Comment