குத்துச்சண்டை போட்டியில் வன்முறை: கூட்ட நெரிசலில் சிக்கி 18 பார்வையாளர்கள் பலி!
கிழக்கு இந்தோனீசியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டி ஒன்றில் உள்ளூர் போட்டியாளர் தோற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாகப் போலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள் ளிரவுக்குச் சற்று முன்பாக நிகழ்ந்த வன்முறையை அடுத்து, அரங்கில் குழுமியிருந்த சுமார் 1,500 பார்வையாளர்கள் முண்டி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயன்றதால், பெண்கள் உட்பட பலர் மிதிபட்டு மரணம் அடைந்ததாக பாப்புவா மாநில போலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். போட்டி நடந்த, நபிரே நகரில் உள்ள கோத்தா லாமா விளை யாட்டு அரங்கில் மொத்தம் 5 வாயில்கள் இருந்தபோதும் அவற் றில் இரண்டு மட்டுமே செயலில் இருந்தது என்றும் அதனால் அருகிலிருந்த வாயில் ஒன்றின் வழியாக விரைந் தோடி தான் வெளியேறியதாகவும் பெயர் தெரி விக்க விரும்பாத ஒருவர் தெரி வித்தார்.
நடுவர்கள் அளித்த புள்ளி களின் அடிப்படையில் அந்தப் போட்டியின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதை அடுத்து, தோற்ற போட்டியாளரின் ஆதரவாளர்கள், நடுவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். பதிலுக்கு வெற்றி பெற்றவரின் ஆதரவாளர்கள் போத்தல் களையும் உடைந்த நாற்காலி களையும் வீசி எறிய, அரங்கில் குழுமியிருந்த பார்வை யாளர்கள் பீதியடைந்தனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் பெண்கள் என்றும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment