சிறைச்சாலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் 150 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்.
இந்தோனேஷியாவில் மெடான் நகரிலுள்ள டென்ஜங் கஸ்டா சிறைச்சாலையில் ஏற்ப்பட்ட கலவரத்தினால் சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கைதிகளுக்குமிடையில் ஏற்ப்பட்ட மோதல்களையடுத்தே கைதிகள் தப்பிச்சென்று ள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் தமக்கான குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென வலியுறுத்தி கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
எனினும் பதற்ற நிலையைப் பயன்படுத்தி சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்று ள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தப்பிச் சென்ற கைதிகளை கைதுசெய்வத ற்காக பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகளும் தப்பிச் சென்றவர்களில் அடங்குவதாக இந்தோனேஷிய பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையிலுள்ள சொத்துக் களுக்கும் தீ வைத்துள்ளதாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment