13 வது அரசியலமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து மேனனுக்கு தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!
13 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான இண க்கப்பாட்டை எட்டுவதற்கு சிறந்த இடம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவாகுமென ஜனாதிபதி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்க மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி மேனனிடம் தெளிவுப்படுத்தியதுடன், முன்னெடுக்கப்படும் திட்டம் நாட்டின் சகல தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய மற்றும் இணங்க கூடிய ஒன்றாக அமைய வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும், ஜனாதிபதி வலியுறுத்தினார். 13 வது அரசிய லமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான இணக்கப்பாட்டிற்கு வருவது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமென ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை தூண்டுமாறு இந்தியாவி;டம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி எவ்வாறான தடைகள் வந்த போதிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுமென தெரிவித்தார்.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இதே நேரம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார். சிவசங்கர் மேனன் நேற்று இலங்கைக்கு வருகை தந்தார்.
0 comments :
Post a Comment