திருத்தங்கள் இல்லை... மூன்று மாகாணங்களினதும் தேர்தல் 13 திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெறும்! ஊடக அமைச்சர்
தற்போது நடைமுறையிலுள்ள 13 திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாணம் உள்ளிட்ட ஏனைய மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகிறார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் வருகின்ற இரு மாகாணங்களுக்கோ மூன்றுக்கோ ஒன்றிணைந்த தனியொரு மாகாண சபையை அமைப்பதற்குத் தேவையான சரத்தினை நீக்குவதற்கும் மாகாண சபைக்குத் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு சட்டமூலத்தைக் கொண்டுவருதற்கு முன்னர், சகல மாகாணங்களினதும் விருப்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என் ற சட்டமூலம் மாகாண சபைகளில் பெரும்பான்மை விருப்பினைப் பெற்றுக்கொண்டால் போதுமானது என்ற திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ள போதும், அவ்விரு யோசனைகளும் பாராளுமன்றத்தின் விசேட செயற்குழுவின் அறிக்கையின் பின்னரே முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப, மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் 13 திருத்தச் சட்டத்தின்கீழ் நடைபெறும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment